தெரிஞ்சுக்குவோம்!...



            நமது உடலைச் சிறப்பானதாக ஆக்கவும், நோய்களிலிருந்து காப்பதற்காகவும் நமது உடலுக்கு பல வகைகளிலும் உதவியாக இருக்கும் வைட்டமின் எது?  இது கூடவா தெரியாது…. வைட்டமின் “ஏ” தானே என்கிறீர்களா?  அதுதான் இல்லை. அப்ப “பி” யா? இல்லை. எனக்கென்னமோ நம்ம எலும்ப பலப்படுத்துற வைட்டமின் “டி” யா இருக்குமோன்னு தோனுது அப்படிங்கிறீங்களா?... இல்லைங்க.....இல்லை.... அப்ப “சி” யா…. அப்ப இல்ல... எப்பவுமே வைட்டமின் “சி” தான். அது எப்படிங்கிறீங்களா?... வைட்டமின் “சி” யோட பயன்களைச் சொல்றேன் கேளுங்க.. அப்புறம் சொல்லுங்க… நான் சொல்றது  சரிதான்னு...
*உடல் சீராக வளர உதவும்  வைட்டமின் “சி” நம்ம எலும்பும், பற்களும் உருவாக உதவுது.
**ஜலதோஷத்த ஓரளவு கட்டுப்படுத்த உதவுது.
***உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரித்து உடலின் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுது.
****பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் உண்டாகும் தொற்று நோய்களைத் தடுக்கிறது.
*****உணவிலிருந்து இரும்புச் சத்தை நமது உடல் கிரகிக்க வைட்டமின் “சி” உதவுது..
சரி... சரி... 
      இவ்வளவு பயன்களைத் தரும்                    உயிர்ச்சத்து “சி” எதில் அதிகமுன்னு கேக்குறீங்களா?       
முழுநெல்லிக்காய்-இல்        தாங்கோ!....

Comments

Popular posts from this blog

உரையாடல் எப்படி இருக்க வைண்டும்...