undefinedசிவப்பு...
        சக்தி, ஆற்றல் மற்றும் வலிமையை குறிக்கும் நிறம் சிவப்பு. புற்று நோயை குணப்படுத்திடவும், புண் மற்றும் காயங்களை ஆற்றிடவும் பெரிதும் உதவுகின்றது இந்நிறம். மேலும் இந்நிறம் குளிர் பாகங்களில் வெப்பத்தை ஏற்படுத்தி உடலில் ஏற்பட்டுள்ள வலியினைக் குறைத்திட உதவிடும். இரத்தம் மற்றும் இரத்த ஓட்டம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மனச்சோர்வினை நீக்கி தெளிவு அளிக்கும் வலிமை பெற்றது சிவப்பு நிறம்.
             ஆண்களுக்கு இளம்பெண்களைப் பார்த்ததும் நாடித்துடிப்பு அதிகம் துடிக்கிறது என்கிறார்கள். உண்மையில் சிவப்பு நிறத்தைப் பார்த்ததும்தான் இதயம் வேகமாகத் துடிக்கிறதாம். 
        சிவப்பு நிறத்தை பார்த்து மட்டுமல்ல... செவ்வாய் கோளைப் பார்த்தும் தான்!
   அந்த செவ்வாயை பற்றி தான் நாம் இங்கு காணப்போகிறோம்.
        செவ்வாய் சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களில் நான்காவதாக உள்ளது. இது பூமியை ஒத்த அளவில் உள்ளது. அதனாலோ என்னவோ நமக்கு அதன் மேல் சற்று பிரியம் அதிகம். 
செவ்வாய் கிரகம் சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பதால் செவ்வாய் எனப் பெயர் பெற்றது போலும்!. அதன் சிவப்பு நிறத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்.... என்று ஆதிகாலத்திலேயே மண்டையைப் போட்டு குழப்பிக்கொண்ட மனிதனுக்கு, அந்த கிரகத்தின் மேலுள்ள இரும்பு ஆக்ஸைடே என்று தெரிய வந்ததும், அதன் மேல் தீவிரக் காதல் கொண்டான். 
அதன் விளைவாக செவ்வாயை ஆராய அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்றவை செயற்கைக்கோளினை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு அனுப்பியிருந்தன. அந்த வரிசையில் முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக அனுப்பி நாம் சாதித்துள்ளோம்.
செவ்வாயினை நாம் ஏன் ஆராய வேண்டும்?
செவ்வாயினை நோக்கிய இந்திய பயணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று... 
வடிவமைப்பு, திட்டமிடல் மேலாண்மை மற்றும் இருகிரகங்களுக்கிடையே பணி செய்ய தேவையான தொழில் நுட்பங்களை உருவாக்குதல் ஆகும். மேலும் செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள அமைப்புகள் பற்றி அறிதல்.அதில் உள்ள கனிம வளங்கள், அதன் வளிமண்டலம் போன்றவற்றை ஆராய்தல் போன்றவையுமாகும்.இந்த பயணத்தில் நாம் பல சவால்களை எதிர்கொண்டோம். அவை என்னவென்றால் விண்வெளியில் நிலவும் வெப்பம், கதிஉவீச்சு, தொலைத்தொடர்பு முறை, செயற்கைக் கோள் இயங்கத் தேவையான மின் சக்தி அமைப்பு போன்ற பல ஸ்வால்களை சந்திக்க வேண்டி வந்தது.  அதிலும் 400 மில்லியன் கிலோமீட்டர்களுக்கு செய்தி அனுப்பிப் பெறும் வழிமுறை மிகுந்த சவால் கொண்டது.. அந்த சவால் அனைத்தையும் வெற்றி கொண்டு நம் இஸ்ரோ சாதித்துள்ளது.

Comments

Popular posts from this blog

உரையாடல் எப்படி இருக்க வைண்டும்...