ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்

1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில், ஒரு படகுச் சொந்தக்காரரும் மரைக்காயரும் ஆன ஜைனுலாப்தீன் அவர்களுக்கும், இல்லத்தரசி ஆஷியம்மா அவர்களுக்கும், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில், மகனாகப் பிறந்தார். அவர் வறுமையான பின்னணியிலிருந்து வந்தவர் ஆனதால், இளம் வயதிலேயே, அவருடைய குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் கிடைப்பதற்காக, வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். அவர் பல மத சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவர் என்றாலும், ஒரு மத வழக்கத்தையே பின்பற்றினார். பள்ளி முடிந்ததும், கலாம் அவரது தந்தையின் வருமானத்திற்குப் பங்களிக்கும் பொருட்டு, செய்தித்தாள்கள் விநியோகத்தில் ஈடுபட்டார். தனது பள்ளிப்பருவத்தில், கலாம் சராசரி மதிப்பெண்களே பெற்றார். என்றாலும், பிரகாசமான மாணவனாகவும், கற்பதில் திடமான ஆர்வமும், படிப்பிற்காக, முக்கியமாக கணக்குப் பாடத்திற்காக, பல மணி நேரங்கள் செலவளிப்பவராகவும், அவர் சித்தரிக்கப்படுகிறார்.

Comments

Popular posts from this blog

உரையாடல் எப்படி இருக்க வைண்டும்...