மன நலமே நம் நலம்

அது என்னங்க எப்ப பார்த்தாலும் மன நலம், மன நலம் அப்படிங்கிறாங்களே அப்படின்னா என்னங்கற கேள்வி தோணுதா.... எனக்கும் தோணுச்சு..... என்ன கூகுள்ள தேடினேன்.அப்ப எனக்கு கிடைத்த தகவலை பகிர்ந்துக்
கொள்கிறேன்.

1 . மன நலம் என்றால் என்ன ?
             சமூகத்தில் வாழும் ஒருவர் தனது பலம் என்ன? பலவீனம் என்ன? அப்படிங்கிறதை தெரிந்து கொண்டு, தன் வாழ்க்கையில் வரக்கூடிய அனைத்து இன்ப, துன்பங்களையும் அறிந்து, தனக்கும் தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்கும் தன்னால்  எவ்விதத்திலும் பாதிப்புகளும் ஏற்படாதவாறு தனது வாழ்க்கைக்கான முடிவுகளை தானே ஏற்று முழுமையான மன ஆரோக்கியத்துடன் வாழ்வதே மனநலமாகும் .
            ஒருவனுடைய நல்வாழ்விற்கான அத்திவாரமாகக்கருதப்படுவதும் மன நலமே ஆகும் . அவனது வீடும் நாடும் பயன்மிக்கதாக செயற்படுவதற்கும் அதுவே வழிவகுக்கிறது . ஒருவனது உடல், உள்ளம், சமூகம் , சூழல், ஆன்மீகம் போன்ற அனைத்திலும் சமநிலை பேண உதவுவதும் மனநலமேயாகும்.

Comments

Popular posts from this blog

உரையாடல் எப்படி இருக்க வைண்டும்...